MS Dhoni Believes he Can do Anything’: Pretorius Looks to Bring CSK Skipper’s Calmness in His Game, தன்னால் எதுவும் முடியும் என்று நம்புபவர்தான் தோனி

Share

தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான டிவைன் பிரிட்டோரியஸ் தோனியுடன் தான் பேட் செய்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இருமுறைதான் தோனியுடன் பேட் செய்தார், பெரிய பார்ட்னர்ஷிப்பும் இல்லை, ஆனால் பெரிய அளவில் கற்றுக் கொண்டதாக கூறுகிறார் பிரிட்டோரியஸ்.

ஐபிஎல் 2022 தொடர் சிஎஸ்கே என்ற டாடீஸ் ஆர்மிக்கு படுமோசமாக அமைந்ததோடு, ஜடேஜா என்ற இந்திய ஆல்ரவுண்டரின் தன்னம்பிக்கையையும் தகர்ப்பதில்தான் போய் முடிந்துள்ளது என்பது வேறு கதை என்றாலும் மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை.. கவிஞர்களுக்கு எந்நாளும் பண்டிட்ஜீக்கள் என்று கவிஞர் ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் நுட்பமாக கூறியதை சிஎஸ்கே வீரர்களுக்கு எந்நாளும் தோனிதான் என்று கூறும் அளவுக்கு தோனியின் செல்வாக்கு உள்ளது  என்பதை மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் டிவைன் பிரிட்டோரியஸ் தோனி பற்றிக் கூறும்போது, “என்னுடைய முதல் ஐபிஎல் பயணம் பேரனுபவமாக இருந்தது. சிஎஸ்கே வெற்றிகரமான ஒரு அணியாகும். அங்கு ஆடும்போது ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியுடன் செலவிட்டேன், ஒரு வீரராக நிறைய பொறுப்பு உங்களுக்கு ஏற்படும்.

தோனி கேப்டன்சியில் ஆடுவதையும் அவருடன் பேட் செய்ததையும் விரும்புகிறேன். அவருக்கு இருக்கும் பிராண்ட் வேல்யூ அவர் எவ்வளவு பெரிய பிம்பம் என்பதை எனக்கு வெளிப்படுத்தியது. மேலும் இந்த நாட்டுக்காக விளையாட்டில் அவரது பங்களிப்பையும் இது அறிவுறுத்தியது. அதில் நானும் ஒரு பங்களிப்பு செய்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

பெரிய விஷயம் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டது கிரீசில் அவர் எத்தனை அமைதையாகவும் நிதானமாகவும் இருக்கிறார் என்பதே. அந்த வகையில் தன் பிரஷரை நீக்கிக் கொண்டு எதிரணி பவுலர்கள் மீது பிரஷர் ஏற்றுகிறார். அவர் எப்போதும் தன்னம்பிக்கை கொண்ட மனோபாவம் மிக்கவர்.

தன்னால் எதுவும் முடியும் என்று நம்புபவர் தோனி. நான் அவர் பாணியில் அமைதியையும் என் மீதான நம்பிக்கையையும் களத்தில் கொண்டு வரப்போகிறேன்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் உலகக்கோப்பைக்கான வாசற்படியாகும், இதில் சிறப்பாக ஆடினால் உலகக்கோப்பை அணியில் இடம்பெறலாம், இந்தியா ஒரு வலுவான டி20 அணி எனவே இதில் சிறப்பாக ஆடினால் டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படலாம்” என்றார் டிவைன் பிரிட்டோரியஸ்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com