Motor Vikatan – 01 December 2024 – மோட்டார் நியூஸ்

Share

கியாவின் புது எஸ்யூவி! பெயர் சைரோஸ் (Syros) பனோரமிக் சன்ரூஃபுடன்!

கியா இப்போது செம பிஸி – தனது அடுத்த காரான சைரோஸ் காரில்தான். கியாவின் EV9 மற்றும் கார்னிவல் கார்கள் உங்களுக்குத் தெரியும்தானே! அவற்றின் டிசைனை இன்ஸ்பயர் செய்து வரப் போகிறது இந்த சைரோஸ். இப்போதைக்கு மற்ற எஸ்யூவிகளில் பெரிய குறையாகச் சொல்லப்படும் பின் பக்க இடவசதி மற்றும் சொகுசு – இவற்றைத்தான் மெயின் USP-யாக வைத்து வரப் போகிறது சைரோஸ்.

இது ஒரு மிட் சைஸ் எஸ்யூவி இல்லை; சோனெட், வென்யூ, பிரெஸ்ஸா போன்றவற்றுக்குப் போட்டியாக சப் 4 மீட்டர் எஸ்யூவியாக வரப் போகிறது சைரோஸ். தட்டையான கூரை மற்றும் பாக்ஸி டிசைன் கொண்டு வருகிறது இந்த எஸ்யூவி. எனக்கு இதன் பின் பக்கம் வந்த டீஸரைப் பார்த்தபோது, பழைய டாடா சுமோ கிராண்டே, விக்டா போன்றவற்றைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. ஆனால், இது EV9 எனும் ஃப்ளாக்ஷிப் மாடலைத் தழுவியிருப்பதாகச் சொல்கிறது கியா. கதவுக் கைப்பிடிகள் லேட்டஸ்ட் டிசைனாக, அந்த ஃப்ளஷ் டைப் ஹேண்டில்கள் இருக்கும். இதுவே ப்ரீமியம் ரகம்.

முன்பக்கம் தட்டையான, முத்துச்சிப்பி வடிவ பானெட் இருக்கும். கொஞ்சம் உயர்த்தி வடிவமைக்கப்பட்டிருப்பதால், எஸ்யூவி ஓட்டுவதுபோல் இல்லாமல் ஹேட்ச்பேக் கார் ஓட்டுவதுபோல் எளிதாக இருக்கும் இதன் விசிபிலிட்டி.

இன்னொரு காரைச் சொல்ல மறந்துவிட்டேன்- ஸ்கோடா யெட்டி நினைவிருக்கிறதா? இதன் B-பில்லர், விண்டோ லைன், பாக்ஸி டிசைன் போன்றவை யெட்டியையும் எனக்கு நினைவுப்படுத்துகிறது.

பவர் ட்ரெயின்களைப் பொருத்தவரை இன்னும் வேறெந்தத் தகவல்களையும் சொல்லவில்லை கியா. முதலில் ICE (Internal Combustion Engine) மாடலில்தான் சைரோஸ் வரப் போகிறது. அதிலும் டீசல், பெட்ரோல் எது எனத் தெரியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து சைரோஸின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வருமாம். அப்படி வந்தால் கியாவின் விலை குறைந்த எலெகட்ரிக் எஸ்யூவியாக இது இருக்கும். இரண்டுமே ஒரே ப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்பட இருக்கிறது. 4வீல் டிரைவ் வெர்ஷன் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. எனவே, ஃப்ரன்ட் வீல் டிரைவ் மட்டும்தான். இந்தக் குட்டி எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃபும் உண்டு என்கிறார்கள். வாவ்!

ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா – இவற்றோடு இப்போதுதான் ஸ்கோடா கைலாக்கும் களத்தில் இறங்கியிருக்கிறது. இதன் கூடவே சைரோஸ் காரும் வந்தால் போட்டி சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். இந்த சுவாரஸ்யம் அநேகமாக 2025 ஜனவரிக்குள் நடக்கலாம்.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக்கில்

இரட்டை பேட்டரி! ஆனால்?

ஹோண்டாவில் CUV-e எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குளோபலாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத் தழுவி ஒரு ஸ்கூட்டரைக் கொண்டு வருகிறது ஹோண்டா. இதுதான் ஆக்டிவா எலெக்ட்ரிக் என்று போன மாதமே பார்த்தோம். 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, 80 கிமீ டாப் ஸ்பீடு போன்றவற்றோடு இன்னொரு ஸ்பெஷல் – இதில் கழற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய Removable Battery ஆப்ஷன் கொடுத்திருப்பதுதான். இதுவும் CUV-e ஸ்கூட்டரில் இருப்பது மாதிரியேதான்! ஒவ்வொரு பேட்டரியும் 1.3kWh சக்தி கொண்டிருக்கும். இதன் ரேஞ்ச் 70 கிமீ என்று ஹோண்டாவின் குளோபல் வலைதளத்தில் சொல்லப்பட்டாலும், ஸ்டாண்டர்டு மோடில் ஓட்டினால் 104 கிமீ ரேஞ்ச் தரும் என்று நம் இந்தியாவுக்கு விடப்பட்ட டீஸர் அறிவிப்பில் சொல்லியிருக்கிறது ஹோண்டா. இந்த இரட்டை பேட்டரிகள் வரம் என்றாலும், இதன் பூட் ஸ்பேஸ் காலியாகும் என்பது ஒரு மைனஸ். ஒரு சின்ன Cubby ஏரியாதான் இதன் அண்டர்சீட் ஸ்டோரேஜில் இடவசதியாக இருக்கிறது. முன் பக்கம் ஒரு ஸ்டோரேஜ் பாக்ஸ் கொடுங்க ஹோண்டா! காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்!

ஹோண்டா ஆக்டிவா EVஹோண்டா ஆக்டிவா EV

ஹோண்டா ஆக்டிவா EV

டாடா சியரா எலெக்ட்ரிக் 2025-ல் வரப் போகுது!

டாடா சியரா – இந்தப் பேரை 90’ஸ் கிட்ஸ் யாரும் மறந்துவிட முடியுமா என்ன? ஸ்டேஷன் வேகன் காரான இந்தக் காரை மறுபடியும் கொண்டு வருவதில் டாடா மும்முரமாக இப்போது வேலை பார்த்து வருகிறது. எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல்/டீசல் என எல்லா வகைகளிலும் சியரா வரப் போகிறது. டாடாவின் புதிய அட்லஸ் (Atlas) என்கிற ப்ளாட்ஃபார்மில் ரெடியாகப் போகிறது இதன் ICE மாடல். இதுவே எலெக்ட்ரிக் வெர்ஷன் ஹேரியர் இவி தயாராகும் Gen2 EV என்கிற ப்ளாட்ஃபார்மில் தயாராக இருக்கிறது. சஃபாரி ஸ்டார்முக்குப் பிறகு, டாடாவின் முதல் 4X4 ICE எஸ்யூவியாக வரப் போகும் டாடா கார் இதுவாகத்தான் இருக்கும். சியரா எலெக்ட்ரிக்கில் டூயல் மோட்டார் மற்றும் 4வீல் டிரைவ் வருமா என்று தெரியவில்லை. 2025 முதல் காலாண்டில் ஹேரியர் இவி, அடுத்த அரையாண்டில் சியரா இவி என்று திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா சியரா  EVடாடா சியரா  EV

டாடா சியரா EV

கூகுள் மேப்பை நம்பி பாலத்தில் இருந்து விழுந்த வேகன்-ஆர்!

உத்திரப் பிரதேச மாநிலத்தில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூகுள் மேப்பை நம்பி கார் ஓட்டிய வேகன்-ஆர் டிரைவர், முடிவடையாத பாலத்தில் இருந்து விழுந்ததால், அதில் பயணித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். Navadia-வில் இருந்து Khallpur எனும் இடத்துக்குப் போக, 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு, கூகுள் மேப் போட்டுப் பயணித்திருக்கிறார் அந்த வேகன்-ஆர் வாடகை கார் டிரைவர். உத்திரப் பிரதேசத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள் அந்த இரு பயணிகளும். கூகுள் மேப்பில் வேகமான ரூட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் டிரைவர். பரேலியில் உள்ள அந்த ஆற்றின் மேல், போன ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, கட்டுமானத்தில் இருக்கிறது அந்தப் பாலம். அந்தக் கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து அந்த வேகன்-ஆர் கீழே விழுந்ததில், 3 பேருமே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். கூகுள் மேப்பை நம்பிப் பயணிக்கும்போது, எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!

23 ரன்களால், ஃபெராரி காரை இழந்த கிரிக்கெட் வீரர் சேவாக்கின் மகன்!

கிரிக்கெட்டின் ரியல் கெத்து – வீரேந்தர் சேவாக், இவரின் மகன் ஆர்யாவீர் சேவாக். இவரும் தன் தந்தையைப்போலவே பேட்ஸ் மேன். டெல்லி டீம் சார்பாக, பீஹார் கப் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார் ஆர்யாவீர் சேவாக். இந்தப் போட்டியில் தன் தந்தையைப் போலவே அதிரடியாக விளையாடி, 297 ரன்கள் எடுத்துக் குவிந்திருந்தார் ஆர்யாவீர். இதில் 23 ரன் வித்தியாசத்தில் ஆர்யாவீருக்கு ஃபெராரி கார் பரிசாகக் கிடைப்பது மிஸ் ஆகியிருக்கிறது. அதென்ன 23 ரன்கள்? 2008-ல் தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் தந்தை சேவாக், 319 ரன்கள் எடுத்திருந்தார். அதை முறியடித்திருந்தால், அவருக்கு ஒரு பிராண்ட் நியூ ஃபெராரி பரிசாகக் கிடைத்திருக்கும். `23 ரன்களில் ஃபெராரியை இழந்தாலும், வேகத்தைத் தக்க வைத்துக் கொள்; தந்தையின் ஒற்றைச் சதம், இரட்டைச் சதம் சாதனைகளை முறியடிக்க வாழ்த்துகள்!’ என்று இதைத் தன் வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார் வீரேந்தர் சேவாக்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com