MI v GT: வாள் வீசி சதம் கண்ட சூர்யா; ரிப்பீட் மோடில் சிக்ஸர்கள் விளாசி இதயங்களை வென்ற ரஷித் கான்! | IPL 2023: MI vs GT – Suryakumar Yadav and Rashid Khan stole the show in this high scorer

Share

இமாலய இலக்காய் இருந்தாலும் பேட்டிங் ஆர்டர் மீதும் பனி மீதும் பாரத்தைப் போட்டு இறங்கியது குஜராத். போக, இந்த சீசனில் 200+ ரன்களை மும்பை, பஞ்சாப், ஹைதராபாத் போன்ற அணிகள் சேஸ் செய்து வெற்றியும் பெற்றிருக்கின்றன. பெஹ்ரன்டாஃப்பின் முதல் ஓவரில் நான்கே ரன்கள். இம்பேக்ட் பிளேயராய் உள்ளே வந்த ஆகாஷ் மத்வால்தான் இரண்டாவது ஓவர். அவர் வீசிய லென்த் பாலை லெக் சைடில் திருப்ப முயன்று சாஹா தோற்க பேடில் பட்டது. அப்பீல் போனார் ஆகாஷ். பொங்கலுக்கு போட்ட வாழ்த்து அட்டைக்கு தீபாவளியின்போது பதில் எழுதுவதைப் போல அம்பயர் ரொம்ப நேரம் யோசித்து அவுட் கொடுத்தார். சாஹா ரிவ்யூ கேட்டும் பலனில்லை. அடுத்த ஓவரே ஸ்லாட்டில் வந்த பந்தை நேராய் தூக்க ஆசைப்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் பாண்டியா.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com