அவ்வளவு உறுதியாக நம்பும்பட்சத்தில் யாரும் துணைக்கு இல்லாவிட்டாலும் கேப்டன் என்ற முறையில் ரிஷப் பண்ட் ஆளுமையோடு அந்த ரிவியூவை எடுத்திருக்க வேண்டும். இரண்டு ரிவியூக்களை கையில் வைத்துக் கொண்டு வென்றேயாக வேண்டிய போட்டியில் டிம் டேவிட்டுக்கு ரிவியூ எடுக்கத் தயங்கிய அவரின் மனநிலையை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ரிஷப் பண்ட் சரியாகச் செய்திருந்தால் போட்டியை வெல்லும் வாய்ப்பே டெல்லிக்கு கிடைத்திருக்கும். பிளேஆஃப்ஸிற்கும் தகுதிப்பெற்றிருக்கலாம்.
ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் மட்டும் ஜெர்ஸியின் நிறத்தை மாற்றி பச்சை நிற ஜெர்ஸி அணிந்துக் கொள்வது பெங்களூருவின் வழக்கம். ஆனால், இன்று பச்சை ஜெர்ஸிக்கு பதிலாக அடர்நீல நிற ஜெர்ஸியை அணிந்துக் கொண்டு பெங்களூரு அணி மும்பைக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தது. பெங்களூருவின் எண்ணப்படியே மும்பை வென்று பெங்களூருவிற்கு பிளேஆஃப்ஸ் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
கடந்த இரண்டு சீசன்களிலுமே பெங்களூரு அணி பிளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெற்று எலிமினேட்டர் சுற்றோடு வெளியேறியிருந்தது. இந்த முறையும் லக்னோவிற்கு எதிரான எலிமினேட்டர் சுற்றிலேயே பெங்களூரு ஆடப்போகிறது. அங்கே அந்தப் போட்டியை வென்று பெங்களூரு அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற வேறெந்த அணியும் அவர்களுக்கு உதவ முடியாது.