உயிர்காக்கும் உறுப்புமாற்று சிகிச்சையில் முதன்மை வகிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்! அதன் முன்னோடித்துவமான மருத்துவ நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் சாதனை நிகழ்வுகள்!
எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் பல்வேறு உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை செயல்திட்டம், இந்தியாவிலும் மற்றும் தெற்காசியாவிலும் புதிய தரநிலைகளை நிறுவுவதில் முன்னிலை வகிக்கிறது. பல்வேறு உள்ளுறுப்புகள் மற்றும் அடிவயிற்று உறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை (MVT) மையத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பேராசிரியர் டாக்டர். அனில் வைத்யா தலைமையிலான எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் மருத்துவர்களின் குழு, உறுப்புமாற்று செயல்திட்டத்தின் வழியாக மருத்துவ அறிவியலின் எல்லைக்கோடுகளை தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது.

சிக்கலான மருத்துவ சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதில் எம்ஜிஎம்-ன் அர்ப்பணிப்பையும் மற்றும் நோயாளிகளின் உயிர்களை காப்பதில் தளராத பொறுப்புறுதியையும் எடுத்துக்காட்டுகிற 5 முக்கியமான நேர்வு ஆய்வுகளை (Case Studies) சமூகத்தின் பார்வைக்கு வைப்பதில் எம்ஜிஎம் பெருமிதம் கொள்கிறது.
பல்வேறு உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை (MVT) என்பது, உலகளவில் உறுப்புமாற்று செயல்திட்டங்களில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் புதிய பிரிவாகும். குறிப்பிட்ட சில நாட்பட்ட வாழ்க்கைமுறை நோய்களை குணமாக்குகிற மற்றும் நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிற திறனுடன் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் உறுப்புமாற்று சிகிச்சைகளை எம்ஜிஎம் ஹெல்த்கேர், சென்னை வழங்கி வருகிறது. இந்த மருத்துவ செயல்முறைகளின் மூலம் உயிர்களை காப்பாற்ற இயலுமென்பதால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இப்புதிய செயல்திட்டம் நம்பிக்கையை தந்திருக்கிறது.

கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல், கணையம், வயிறு போன்ற இரையக குடற்பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது செயல்திறன் இழந்து வருகிற உறுப்புகளுக்கு பதிலாக, உயிரிழந்த தானம் அளிப்பவரிடமிருந்து பெறப்படும் ஆரோக்கியமான உறுப்புகளை மாற்றிப் பொருத்தும் செயல்முறை இதில் இடம்பெறுகிறது. நாட்பட்ட நோய்கள் உள்ள நபரிடமும் மற்றும் பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு இரையகக் குடலிய பாதையில் புற்றுநோய்களினால் அவதியுறுகிற நபர்களிடமும் இந்த உறுப்புமாற்று சிகிச்சைகள் மிகவும் பலனளிப்பதாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
வாய் வழியாக உட்கொள்ளப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை முறையாக உறிஞ்சவிடாமல் குடலை தடுக்கும் ஒரு பாதிப்பு நிலையான குறுகிய குடல் நோய்க்குறி (short gut syndrome) உள்ள நோயாளிகளுக்கு விரிவான குடல் சார்ந்த மறுவாழ்வு சேவையினையும் பல்வேறு உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை செயல்திட்டம் வழங்குகிறது. இந்த தனித்துவமான திட்டம், முழுமையான, ஊசிவழியாக செலுத்தப்படும் ஊட்டச்சத்து (TPN) என அழைக்கப்படுகிறது முறையாக செயல்படாத செரிமான அமைப்புகள் உள்ள நோயாளிகளுக்கு சிறை ஊடாக முழுமையான ஊட்டச்சத்தும் வழங்கப்படும் ஒரு வழிமுறை இது.

குறுகிய குடல் நோய்க்குறி பாதிப்புள்ள நோயாளிகளின் உடல்நிலை மோசமாவதிலிருந்து தடுத்து சீராக்குவதற்கு TPN-ஐ பயன்படுத்துவதில் எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் MVT குழு சிறப்பு நிபுணத்துவம் கொண்டிருக்கிறது.
பேராசிரியர் டாக்டர். அனில் வைத்யா தலைமையின்கீழ் இயங்கும் இந்த MVT குழு, உயிருள்ள தானமளிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையை குழந்தைகளுக்கு வெற்றிகரமாக செய்திருக்கிறது. இறுதிநிலை சிறுநீரக நோய்ப்பாதிப்புள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு
கணையம் மற்றும் சிறுநீரகத்தை ஒன்றாக ஒரே நேரத்தில் மாற்றும் சிகிச்சைகளையும் புற்றுநோயாளிகளில் சிறுகுடல் மாற்று சிகிச்சையையும், உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்படும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளையும் மற்றும் பல்வேறு உறுப்புகள் செயலிழந்திருக்கிற நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த பல உறுப்புகளை மாற்றும் சிகிச்சையையும் இக்குழு வெற்றிகரமாக செய்திருக்கிறது.

நேர்வு ஆய்வு 1 : வியப்பூட்டும் வகையில் குணமடைந்த தைரியமான 9 வயது சிறுவன்
9 வயதான ஹரீஷ் சோலங்கி என்ற சிறுவன் கீழே விழுந்ததனால் தொடை எலும்பு உடைந்து உயிருக்கு ஆபத்தான சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. எலும்பியல் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோதிலும்கூட அதன்பிறகு அவனது நிலைமை மோசமாக தொடங்கியது. குறுகிய குடல் நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டதால் சிறுகுடல் உறுப்புமாற்று சிகிச்சை ஹரீஷ்க்கு அவசியமாகத் தேவைப்பட்டது. எம்ஜிஎம் ஹெல்த்கேர்-க்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட ஹரீஷ்- க்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் அவனது உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியானது. எனினும் டாக்டர்.
தினேஷ் மற்றும் டாக்டர். நிவாஷ் ஆகியோருடன் டாக்டர். அனில் வைத்யா தலைமையிலான மருத்துவர்களின் மேம்பட்ட திறன்களால் ஹரீஷ் பாதிப்பிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தான் சிறுகுடல் உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக அவனுக்கு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இப்போது முழுமையான உடல்நலம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அவன் இப்போது தைரியத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
நேர்வு ஆய்வு 2 : கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தலைவிக்கு வாழ்க்கையைத் தொடர இரண்டாவது வாய்ப்பு
குறுகிய குடல் நோய்க்குறியின் கடுமையான பாதிப்பு அறிகுறிகளுடன் கேரளாவைச் சேர்ந்த 46 வயதான குடும்பத்தலைவி எம்ஜிஎம் ஹெல்த்கேர்-க்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். டாக்டர். அனில் வைத்யா அவர்களின் மருத்துவ கவனிப்பின்கீழ் அவர் உயிர்பிழைப்பதற்கு இன்றியமையாததாக இருந்த ஒரு சிக்கலான சிறுகுடல் உறுப்புமாற்று சிகிச்சை செயல்முறை இப்பெண்மணிக்கு செய்யப்பட்டது.

பெங்களுருவிலிருந்து விமானத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட ஆரோக்கியமான சிறுகுடலை இவருக்குப் பொருத்தும் சிறப்பான விளைவுகளை தந்திருக்கிறது. தனது இயல்பான வாழ்க்கையை உற்சாகத்தோடு தொடங்குவதற்கு தயாராகிவரும் இப்பெண்மணி இப்போது முழுமையாக குணமடைந்து வருகிறார்.
நேர்வு ஆய்வு 3 : கணையம் – சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையின் மூலம் புரட்சிகரமாக மாறும் நீரிழிவு பராமரிப்பு
தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் 34 வயதாகும் திரு. பரம் க்ரோவர், வகை 1 நீரிழிவு, டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைவது பற்றிய அறியாத நிலை ஆகிய சிக்கல்களை எதிர்த்து போராடி உயிர்வாழ்கிற நிலையில் இருந்தார். பேராசிரியர் டாக்டர். அனில் வைத்யா உட்பட மருத்துவ நிபுணர்களின் குழு இவருக்கு ஒரே நேரத்தில் கணையம் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை மேற்கொண்டது. இவரது வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவரும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. டயலாசிஸ் சிகிச்சையிலிருந்து இவருக்கு விடுதலை அளித்த இந்த செயல்முறை, நீரிழிவு நிலையிலிருந்தும் இவரை குணமாக்கியிருக்கிறது மேலும் இதனோடு தொடர்புடைய பிற சிக்கல்களின் இடர்வாய்ப்பை பெரிதும் குறைத்திருக்கிறது.
நேர்வு ஆய்வு 4 : விடாமுயற்சி மற்றும் நிபுணத்துவத்தின் மூலம் உயிருக்கான ஆபத்தை வென்ற சாதனை