சென்னை மாநகரின் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் சிறப்பான சேவையாற்றி வரும் உயர்நிலை மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், ஆந்திரப்பிரதேஷைச் சேர்ந்த 7 வயதே ஆன சிறு குழந்தைக்கு ஏற்பட்டிருந்த மோயாமோயா என்ற அரிதான நோய்க்கு சிகிச்சையளிக்க மூளையில் பைபாஸ் (மூளையில் மறுநாளப்பெருக்கம்) சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை பெருமையுடன் அறிவித்திருக்கிறது. குழந்தைப் பருவத்தின் போது பொதுவாக ஏற்படக்கூடிய இந்த அரிதான நிலையானது, ஏறக்குறைய 10 இலட்சம் நபர்களில் ஒருவரை பாதிக்கிறது.

பக்கவாதம் மற்றும் வலிப்புத்தாக்க நிகழ்வுகள் பலமுறைகள் ஏற்பட்டதற்குப் பிறகு 2023 செப்டம்பர் மாதத்தில் நீண்ட காலமாக உணர்விழந்த நிலையில் இருந்த குழந்தை ஸ்ரீவித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை அவளின் பெற்றோர்கள் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர்.
ஒரு விரிவான பரிசோதனைக்குப் பிறகு, எம்ஜிஎம் ஹெலத்கேர் – ன் நரம்பியல் அறுவைசிகிச்சை மையத்தின் இயக்குனர் டாக்டர். ரூபேஷ் குமார் மற்றும் அத்துறையின் மருத்துவர்கள் குழு இச்சிறுமிக்கு மூளையில் ஆஞ்சியோகிராம் சோதனையை செய்தது. இரத்தஓட்டத்தைப் பார்ப்பதற்காக நோயாளியின் மூளைக்குள் சாயத்தை உட்செலுத்துவதை உள்ளடக்கிய ஒரு நோயறிதல் செயல்முறை இது. இச்சோதனையின் வழியாக இச்சிறுமிக்கு ஏற்பட்டிருப்பது மோயாமோயா நோய் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பெரும்பாலும் குழந்தைகளிடம் அடையாளம் காணப்படும் மோயாமோயா நோய்களில், மூளையிலுள்ள இரத்தநாளங்கள் சுருங்கி, குறுகலாகவும் மற்றும் இரத்தஓட்டம் தடைபட்டதாகவும் இருக்கும். மோயாமோயா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு புகை மூட்டம் என பொருள் கொள்ளலாம். இரத்தநாளங்கள் அடைபட்டிருக்கும் நிலையில் அவற்றிற்கு மாற்றாக, சிறு நாளங்கள் தோன்றுவதை இது குறிப்பிடுகிறது. இந்த பாதிப்புடைய நோயாளிகளுக்கு சிறிய பக்கவாத (ஸ்ட்ரோக்) தாக்குதல், இரத்தநாளம் பலூன் போல விரிவடையும் நிலை அல்லது மூளையில் இரத்தக்கசிவு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்வாய்ப்புகள் அதிகமிருக்கும். மூளையின் இயக்கத்தை இது பாதிக்கும்; அறிவுத்திறன் மற்றும் வளர்ச்சி தாமதங்களை அல்லது திறனிழப்புகளை குழந்தைகளிடம் விளைவிக்கும்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ன் நரம்பியல் அறுவைசிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர். ரூபேஷ் குமார் மற்றும் அத்துறையின் சிறப்பு நிபுணர்கள் டாக்டர். சரன்யன், டாக்டர். ஹரீஷ் சந்திரா, டாக்டர். ஆர். பாபு மற்றும் இணை சிறப்பு நிபுணர் டாக்டர். ராஜேஷ் மேனன் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவர் குழு இச்சிறுமிக்கு மூளையில் இரத்தஓட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்காக மூளையில் பைபாஸ் அறுவைசிகிச்சையை செய்திருக்கிறது.
இச்சிறுமியின் இரத்தநாளங்கள் 1 மி.மீட்டருக்கும் குறைவானதாக இருந்ததால், இந்த மூளை அறுவைசிகிச்சை மிக கடினமானதாக இருந்தது. எனினும், சிறு இரத்தநாளங்களுக்கு இணைப்பு நிலையை உருவாக்கிய மற்றும் இரத்தஓட்டத்தை அதிகரித்திருக்கும் இந்த பைபாஸ் சிகிச்சை இச்சிறுமிக்கு மறுபிறப்பை தந்திருக்கிறது என்றே குறிப்பிடலாம்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ன் நரம்பியல் அறுவைசிகிச்சை துறை மையத்தின் இயக்குனர் டாக்டர். ரூபேஷ் குமார் இச்சிகிச்சை தொடர்பாக கூறியதாவது: “எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ல் இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் அதிக சிக்கலான அறுவைசிகிச்சைகளுள் இதுவும் ஒன்று. எம்ஜிஎம் ஹெல்த்கேர் – க்கு அழைத்து வரப்பட்டபோது இச்சிறுமி உணர்விழந்த நிலையில் இருந்தாள். இச்சிறுமிக்கு இருபக்கங்களிலும் மோயாமோயா நோய்க்குறி இருப்பதையும், அவளின் மூளையின் இரத்தஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டதற்கு அதிலுள்ள இரத்தநாளங்கள் வழக்கத்திற்கு மாறாக சுருங்கி, குறுகிய நிலையில் இருப்பதையும் எமது மருத்துவர்கள் குழு கண்டறிந்தது.
மூன்று நாட்களாக இக்குழந்தை, கண்ணை விழிக்க இயலாமல், தூக்க கலக்கத்தோடே இருந்தது. அதன்பிறகு, உணர்விழந்த நிலைக்குச் சென்றது. எனவே, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு கூடிய விரைவில் மூளையில் பைபாஸ் அறுவைசிகிச்சையை செய்ய வேண்டுமென நாங்கள் ஆலோசனை வழங்கினோம். இந்த வெற்றிகரமான பைபாஸ் அறுவைசிகிச்சைக்குப் பிறகு, இச்சிறுமி இப்போது முற்றிலும் மீண்டு குணமடைந்திருக்கிறாள். கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில், மிகவும் துடிப்பாகவும், உற்சாகமாகவும் அவள் செயல்படுகிறாள்.”

உரிய நேரத்தில் செய்யப்பட்ட இந்த மூளை பைபாஸ் அறுவைசிகிச்சை மூளைக்குள் இரத்தஓட்டத்தை மறுபடியும் சீராக்கியிருக்கிறது. இதன் காரணமாக, இயல்புநிலையை நோக்கி வேகமாக இச்சிறுமி மீண்டு வந்து கொண்டிருக்கிறாள். 1 மி.மீட்டருக்கும் குறைவாக இக்குழந்தையின் மூளையில் இரத்தநாளங்கள் மிகவும் குறுகியிருந்தது அறுவைசிகிச்சையில் ஒரு பெரிய சவாலாக இருந்தது. இந்த பைபாஸ் அறுவைசிகிச்சை, சிறு நாளங்களுக்கு இணைப்பு நிலையை உருவாக்கியது மற்றும் இதன்மூலம் இரத்தஓட்டம் அதிகரிக்கப்பட்டது. இச்சிகிச்சை, இக்குழந்தைக்கு ஒரு மறுபிறப்பையே தந்திருக்கிறது என்று நிச்சயமாக குறிப்பிடலாம்.
எம்ஜிஎம் ஹெல்த் கேர் – ன் குழும தலைமை செயல் அலுவலர் திரு, ஹரீஷ் மணியன் கூறியதாவது: “மருத்துவ நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட நவீன கட்டமைப்பு வசதிகள் இணையும்போது எழக்கூடிய கூட்டிணைவு ஆற்றலை இந்த மூளை பைபாஸ் அறுவைசிகிச்சையின் வெற்றிகரமான விளைவு வலுவாக எடுத்துக்கூறுகிறது. பலருக்கும் உத்வேகம் அளிக்கின்ற, வியக்க வைக்கின்ற ஒரு பயணமாக இது இருந்தது. எமது மூளை – நரம்பியல் துறை எந்த அளவிற்கு திறன்மிக்கது மற்றும் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதற்கு இதுவொரு சாட்சியமாகும். உண்மையிலேயே மேம்பட்ட சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கு எப்போதும் சிறப்பான உத்திகளை கையாண்டு வரும் எமது மருத்துவ குழுவினர் மிகவும் திறன் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை இது மிக நேர்த்தியாக வலியுறுத்துகிறது. நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை

பராமரிப்பை வழங்குவதிலும், மருத்துவ தளத்தில் சாத்தியத்திற்கான வரம்பெல்லைகளை விரிவாக்குவதிலும் மற்றும் சிகிச்சை அவசியப்படும் நபர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதிலும், பிறருக்கு வழிகாட்டும் விதத்தில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடர்ந்து முதன்மை வகிக்கிறது.”
அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவில் இச்சிறுமி வைக்கப்பட்டிருந்தாள். அதன்பிறகு முழுமையாக குணமடைவதற்கான செய்முறைக்கு ஏறக்குறைய 3 மாதங்கள் எடுத்திருக்கின்றன.