Messi: `அதை மெஸ்ஸி விரும்பவில்லை'- இந்தியா வருகைக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி ஊதியம்; வெளியான தகவல்கள்

Share

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவரைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பலரும் அவர் வருகை தந்திருந்த ஸ்டேடியத்திற்கு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து டிக்கெட் குளறுபடி உள்ளிட்ட பல குழப்பங்கள் அங்கு எழுந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான சதாத்ரு தத்தாவை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்தனர்.

Lionel Messi
Lionel Messi

கைதுக்குப் பிறகான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இந்த நிகழ்வின் பல விவரங்களும் வெளிவந்திருக்கின்றன.

இந்திய வருகைக்காக மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது எனவும் சதாத்ரு தத்தா கூறியிருக்கிறார். இதில் 11 கோடி ரூபாயை வரியாக இந்திய அரசுக்குச் செலுத்தியிருக்கிறார்கள்.

இதற்கான 30 சதவிகிதப் பணத்தை ஸ்பான்சர்களிடமிருந்து அவர்கள் பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள பணத்தை டிக்கெட் விற்பனை மூலமாகப் பெற்றிருக்கிறார்கள்.

மெஸ்ஸியைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள்.

ஆனால் மைதானத்தில் மெஸ்ஸியைச் சுற்றி அதிகமானோர் கூடிவிட்டதால், கேலரியிலிருந்து அவரைப் பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து ஸ்டேடியத்தின் சில பகுதிகளை சேதப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனந்த் அம்பானி - மெஸ்ஸி
ஆனந்த் அம்பானி – மெஸ்ஸி

விசாரணை அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பாளர் சதாத்ரு தத்தா கூறுகையில், “முதலில், மெஸ்ஸி பங்கேற்கும் நிகழ்வுக்கு வெறும் 150 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் செல்வாக்கு மிகுந்த ஒருவர் ஸ்டேடியத்திற்கு வந்து ஆதிக்கம் செலுத்தியப் பிறகு மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்தது.

அந்த செல்வாக்கு மிகுந்த நபரையும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே சமயம் ரசிகர்கள் தன்னை தொடுவதையும் மெஸ்ஸி விரும்பவில்லை.” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com