meat eaters study links your food with irreversible vision loss know about it

Share

நீங்கள் இறைச்சி உணவுகளை விரும்பி சாப்பிடக் கூடியவர் என்றால், இந்தத் தகவல் உங்களுக்கு கவலை அளிப்பதாக அமையும். தொடர்ச்சியாக இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை பறி போக வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறைச்சியில் அதிகப்படியான புரதச்சத்து இருக்கிறது என்றாலும் கூட, அதை நீங்கள் தவறான முறையில் உட்கொள்ளும் போது பெரும் பாதிப்புகளை உண்டாக்கக் கூடும். இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆய்வு சொல்வது என்ன?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதாவது பூனையின் மலத்தில் இருந்து வெளியேறும் தொற்றுகள் மற்றும் வேக வைக்காத இறைச்சி ஆகியவற்றில் டோஸோபிளாஸ்மா கோண்டி என்ற பாராசைட் உள்ளது. இது கண் பார்வையை இழக்க வழிவகை செய்யும். ஆஸ்திரேலியாவில் 15 நபரில் ஒருவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 5,000 மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், டோஸோபிளாஸ்மா என்பது மனிதர்களின் கண் பார்வையை இழக்க வைக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த பாராசைட்கள், கருவுற்ற தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் என்ன

உங்களுக்கு பாராசைட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை பின்வரும் அறிகுறிகளைப் பொருத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். காய்ச்சல், வீக்கம் அடைந்த விழித்திரை, தசைகளில் வலி, தலைவலி, கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

வெண்ணெய் vs நெய்… இரண்டில் எது சிறந்தது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது..?

பிற தொற்றுகள் என்னென்ன

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சில வகை விலங்கு இறைச்சிகளில் டிரிச்சினெல்லா என்னும் தொற்று இருக்கும். முறையாக சமைக்காத அல்லது வேக வைக்கப்படாத இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது இந்த தொற்று உங்களுக்கு பரவும்.

பாதுகாப்பு வழிமுறை

முறையாக வேக வைக்காத அல்லது பச்சையாக உள்ள இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது லிஸ்டேரியா, இ-கோலி, கேம்பிலோபேக்டர் போன்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக வயிற்றுப்போக்கு உண்டாகும்.

உங்கள் உயரத்தில் பாதி சைஸுக்கு தான் இடுப்பு அளவு இருக்க வேண்டும்… ஏன் தெரியுமா?

தொற்றுகளை தவிர்ப்பது எப்படி

நீங்கள் சாப்பிடுவதற்காக வாங்கும் இறைச்சி புதியதாக, முறையாக சுத்தம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதை நன்றாக வேக வைக்க வேண்டும். சிலர் அரைகுறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள். அப்படி சாப்பிடும்போது தொற்று பரவக் கூடும். இந்த தொற்றானது சக மனிதர்களுக்கும் பரவக் கூடும். ஆகவே கவனமுடன் இருக்க வேண்டும். முறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதே உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம் ஆகும்.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com