‘ஐந்தாவது நாளுக்கு சென்றிருந்தால்…’
இரண்டாம் இன்னிங்ஸில் சற்று வேகமாக ரன்கள் குவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு எவ்வளவு சிறப்பானது என்பது தெரியும். குறிப்பிட்ட பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளப் போகிறோம் என்பதும் தெரியும். அதனால், அவற்றை எவ்வளவு சிறப்பாக ஸ்கோர் செய்ய முடியும் என யோசித்து ஆடினோம். நேதன் லயன் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். போட்டி ஐந்தாவது நாளுக்கு சென்றால், அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிடும்.”
பவுமாவை மறக்கமாட்டார்கள்!
காயத்துடன் பவுமா ஆடியது குறித்து பேசுகையில், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்த முடிவை முழுமையாக எடுத்தது அவரே. மூன்று ஆண்டுகளாக அணியை முன்னின்று வழிநடத்தியவர் அவர். களத்தை விட்டு வெளியேற அவருக்கு விருப்பமில்லை. காயத்துடன் முக்கியமான ரன்களைக் குவித்தார். அவரது இன்னிங்ஸை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.” என்றார்.