make the recipe of curd vadai

Share

தயிர் வடையும் இன்றூ சாட், டெசர்ட் வகைகளை போல் பரிமாறப்படுகிறது. இதற்கென தனி பிரியர்களும் இருக்கிறார்கள். தயிரின் புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து இந்த உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன. எனவே இதை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட ஆசைப்பட்டால் இதோ ரெசிபி…

தேவையான பொருட்கள் :

உளுந்து – 1/2 கப்

புழுங்கல் அரிசி – 1 tbsp

உப்பு – தே.அ

பெருங்காயத்தூள் – போதுமான அளவு

தயிர் – 2 கப்

துருவிய தேங்காய் – 2 tbsp

இஞ்சி – 1 துண்டு

பச்சை மிளகாய் – 1

எண்ணெய்

தாளிக்க

எண்ணெய் – 1

கடுகு – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

மேலே தூவ

சீவிய தேங்காய்

காரா பூந்தி

கொத்தமல்லி

செய்முறை :

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வையுங்கள்.

பின் மிக்ஸியில் உளுந்து , அரிசி சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக தயிரை நன்கு அடித்துகொண்டு அதில் தேங்காய், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தயிரில் கலந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து தயிரில் கொட்டி கலக்குங்கள்.

வேர்க்கடலை பக்கோடா இப்படிதான் செய்யனுமா..!! ரெசிபி இதோ…

வடைக்கு அரைத்த மாவை கடாயில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அவற்றை ஒரு பவுல் வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரை இறுத்து தயிரில் போடுங்கள்.

தயிரில் மூழ்குமாறு வடைகளை போட்டதும் அதன் மேல் தூவ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தூவி சாப்பிடுங்கள்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com