make recipe of peanut pakoda for evening snacks

Share

வேர்க்கடலை பகோடா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ். இதை வீட்டிலேயே எந்த அஜினமோட்டோ கலப்படமும் இன்றி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதோடு நிறைய செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் மாலையில் சாப்பிட நொறுக்குத் தீனியாக தரலாம். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 1 1/2 கப்

கடலை மாவு – 1/2 கப்

அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 5 பற்கள்

வரமிளகாய் – 5

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – 1 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் வேர்க்கடலையை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் பூண்டு மற்றும் வரமிளகாயை நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

மதிய உணவுக்கு பொருத்தமாக இருக்கும் துவரம் பருப்பு துவையல்… 5 நிமிடத்தில் செய்ய ரெசிபி…

பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வேர்க்கடலை பக்கோடா ரெடி.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com