தேவையான பொருட்கள் :
அரைக்க :
சாதம் – 1 கப்
ரவை – 1/4 கப்
அரிசி மாவு – 1 tbsp
தயிர் – 2 tbsp
தண்ணீர் – 1/4 கப்
தாளிக்க :
எண்ணெய் – 2 tsp
கடுகு – 1/4 tsp
சீரகம் – 1/4 tsp
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – 1
உப்பு – 1 சிட்டிகை
துருவிய கேரட் – 1 கைப்பிடி
மிளகாய் தூள் – 1/4 tsp
மஞ்சள் தூள் – 1/4 tsp
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
மிக்ஸி ஜாரில் சாதம், ரவை, அரிசி மாவு, தயிர் மற்றும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்தி மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதில் தேவையான உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , சீரகம் சேர்த்து பொறிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பால் பயன்படுத்தி இத்தனை டெசர்ட் வகைகளை செய்யலாமா..! ரெசிபி இதோ…
பின் அதை வழித்த மாவில் கொட்டி நன்கு கலக்கிக்கொள்ளுங்கள். இப்போது துருவிய கேரட், கொத்தமல்லி , மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் மாவு ரெடி.
இப்போது குழிப்பணியார கடாய் வைத்து எப்போதும் போல் மாவு ஊற்று பணியாரம் சுட்டு எடுத்தால் காரப்பணியாரம் ரெடி…
இதற்கு காரச்சட்னி பொருத்தமாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.