make garlic thokku for idli dosa

Share

இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன சமைக்கலாம் என்று யோசிக்கும்போது இந்த பூண்டு தொக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இதை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் சோம்பேறித்தனமாக இருக்கும் நாட்களிலும் உங்களுக்கு கைக்கொடுக்கும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பூண்டு – 1 கப்

நல்லெண்ணெய் – 2 tbsp

காய்ந்த மிளகாய் – 10

கறிவேப்பிலை – 1 கொத்து

சீரகம் – 1 tsp

புளி – நெல்லிக்காய் அளவு

மிளகு – 1

வெல்லம் – 1/2 tsp

உப்பு – தே.அ

செய்முறை :

முதலில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய வைத்துக்கொள்ளுங்கள்.

காய்ந்ததும் உறித்த பூண்டை சேர்த்து வதக்குங்கள். பாதியளவு சிவந்து வரும்போது காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

பின் கறிவேப்பிலை , சீரகம் , புளி , மிளகு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பூண்டு நன்கு சிவந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு காய வைத்துக்கொள்ளுங்கள்.

சுட சுட சிக்கன் பிரெட் பஜ்ஜி… மாலையில் ஒரு கப் டீ யுடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும்..! ரெசிபி இதோ

பின் அரைக்கும்போது உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து வதக்கிய அனைத்தையும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. அப்படி தேவைப்பட்டால் காய்ச்சிய நல்லெண்ணெய் சேர்த்து அரையுங்கள்.

அரைத்ததும் அப்படியே காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இட்லி , தோசைக்கு பக்காவாக இருக்கும்.

 

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com