தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – 1 கப்
முட்டை – 2
வெங்காயம் – 1
துருவிய கேரட் – 2 tsp
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பேஸ்ட் – 1/2 tsp
எண்ணெய் – தே.அ
கடுகு – 1/2 tsp
உளுத்தம் பருப்பு – 1 tsp
கடலை பருப்பு – 1 tsp
பெருங்காயத்தூள் – 1/4 tsp
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – 1/2 கைப்பிடி
உப்பு – தே.அ

செய்முறை :
முட்டை பணியாரம் செய்ய முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்க விடுங்கள்.
பின் பருப்பு வகைகளை சேர்த்து பொன்னிறமாக வந்ததும் வெங்காயம் , கறிவேப்பிலை , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
ஒரே மாதிரி சட்னி அரைத்து அலுத்து போச்சா..? இந்த கத்தரிகாய் சட்னி செய்து அசத்துங்க…
அடுத்ததாக முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இரண்டு முட்டைக்கு ஒரு கரண்டி மாவு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தாளித்த வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள் ( மாவு புளித்திருக்க வேண்டிய அவசியமில்லை)
அவ்வளவுதான் பணியாரம் சுட மாவு தயார்.
இப்போது எப்போதும்போல் பணியார கல் வைத்து குழியில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பொன் மொறுவலாக சுட்டு எடுங்கள். முட்டை பணியாரம் தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.