தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
கடலைப்பருப்பு – 1 tsp
மிளகு – 10
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு – 1 tsp
துவரம்பருப்பு – 1 tsp
புளி – நெல்லிக்காய் அளவு
சீரகம் – 1 tsp
கடுகு – 1/2 tsp
நல்லெண்ணெய் – 100 ml
உப்பு – 1 tsp
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து

செய்முறை :
கடாய் வைத்து எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்ந்ததும் உருவி வைத்துள்ள கறிவேப்பிலை கொத்துகளை சேர்த்து வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். காய்ந்த மிளாயையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை தனியாக கொட்டிக்கொள்ளுங்கள்.
இறுதியாக புளியையும் ஒரு வதக்கு வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
முருங்கைக்கீரையில் இப்படி ஒரு முறை பொரியல் செய்து பாருங்க… வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க…
இப்போது இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே கடாய் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு சேருங்கள். பின் சீரகம் சேருங்கள்
தாளித்து வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கிளறுங்கள்.
தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.
நன்கு கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். தேவைப்பட்டால் நல்லெண்ணெய் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த தொக்கை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.