make curd chutney for dinner

Share

இரவு உணவுக்கு பெரிய மெனக்கெடல் இருக்காது என்றாலும் என்ன சமைப்பது என தேர்வு செய்து சமைப்பதே பெரிய டாஸ்க்தான். ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறான சுவையை கொடுத்தால்தான் வீட்டில் இருப்பவர்களுக்கும் சளிப்படையாது. இல்லையெனில் இரவு உணவையே வெறுத்துவிடுவார்கள். அந்த வகையில் தயிரின் புளிப்பு சுவையில் வித்தியாசமான முறையில் காரசாரமான தயிர் சட்னி செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள் :

தயிர் – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 1

கடுகு – 1 tsp

எண்ணெய் – 1 tbsp

உப்பு – தே.அ

மிளகாய் தூள் – 1 tsp

தனியா தூள் – 2 tsp

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tsp

கரம் மசாலா தூள் – 1/2 tsp

செய்முறை :

ஃபிரெஷான கெட்டித் தயிர் வாங்கிக்கொள்ளுங்கள். அதை நன்கு கட்டிகள் இல்லாமல் அடித்துக்கொள்ளுங்கள். பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு தாளியுங்கள். பொறிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வெந்ததும், கரைத்து வைத்துள்ள தயிரை ஊற்றி உடனே கிளறுங்கள்.

பிரண்டை துவையல் செய்வது இவ்வளவு சுலபமா..? மதிய உணவுக்கு பொருத்தமாக இருக்கும்…

பின் தயிர் இருந்த பாத்திரத்திலேயே கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுற்றிலும் ஒட்டியிருக்கும் தயிரை வழித்துவிட்டு கடாயில் ஊற்றுங்கள். அடுத்ததாக தட்டுப்போட்டு மூடி 10 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள்.

கொதிந்ததும் மூடியை திறந்து பார்க்க தயிர் கெட்டியாகி இருக்கும்.

அதை மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் தண்ணீர் இறுகி கெட்டியாக வரும். பின் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் சட்னி தயார்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com