இறுதியில், இருவரும் சாம்பியன் பட்டதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இயன் நெபோம்னியாச்சியிடம் கார்ல்சன் முன்மொழிந்தார். அதையடுத்து, நடுவர்கள் அந்த முன்மொழிவை ஏற்று, 2024 பிளிட்ஸ் செஸ் சாம்பியன்களாக இருவரையும் அறிவித்தனர். இதன்மூலம், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில், முதல்முறையாக சாம்பியன் பட்டம் பகிர்ந்துகொள்ளப்படும் முதல் நிகழ்வாக இது அமைந்தது. இருப்பினும், பலரும் இதனை விமர்சித்துவருகின்றனர்.
குறிப்பாக, அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹான்ஸ் நீமன் (Hans Niemann), “சதுரங்க உலகம் அதிகாரப்பூர்வமாக நகைச்சுவையாக இருக்கிறது. வரலாற்றில் ஒருபோதும் இது நடந்ததில்லை. மேலும், இந்த வாரத்தில் 2வது முறையாக செஸ் அதிகாரப்பூர்வ அமைப்பு ஒரு ஒற்றை வீரரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவர் மட்டுமே உலக சாம்பியனாக இருக்க முடியும்!” என்று எக்ஸ் தளத்தில் FIDE-ஐ விமர்சித்திருக்கிறார்.