ஐந்துமுறை உலக சாம்பியனான் மேக்னஸ் கார்ல்சன் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற மறுத்ததால் உலக ரேபிட் மற்றும் ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுட்டு, பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நடப்பு சாம்பியன் கார்ல்சன் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார். இது போட்டி ட்ரெஸ் கோடு விதிமுறைகளின் படி தடை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உடனடியாக உடைமாற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் கார்ல்சன் மறுத்துவிட்டார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கார்ல்சன் தன்னால் உடனடியாக உடை மாற்ற முடியாது என்றும் அடுத்த நாளில் இருந்து சரியான ஆடையுடன் வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் விதிமுறைகளுக்கு உட்படாததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
Magnus Carlsen Twitter Post
OOTD pic.twitter.com/9reOP6zuJv
— Magnus Carlsen (@MagnusCarlsen) December 28, 2024
இதுகுறித்த பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் அறிக்கையில் ஆடை விதிமுறைகள் அனைத்து வீரர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆடைக் குறியீடு விதிமுறைகள் தொழில்முறை வீரர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட FIDE தடகள ஆணையத்தின் உறுப்பினர்களால் வரைவு செய்யப்படுகின்றன. பல ஆண்டுகளாக இந்த விதிமுறைகள் நடமுறையில் இருக்கின்றன. இவை அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்” என எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது FIDE.
மேலும், “FIDE வீரர்களின் தங்கும் அறைகள் போட்டி நடக்கும் இடத்துக்கு அருகில் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதனால் விதிமுறைகளைக் கடைபிடிப்பது எளிதான காரியம்தான்” என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசி இதேப்போல ஆடைக்கட்டுப்பாடுகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டார். ஆனால் உடனடியாக ஆடையை மாற்றிவிட்டு விளையாடத் தொடங்கினார்.
கார்ல்சன் தனக்கு FIDE-ன் ஆடைக்கப்பட்டுப்பாடுகள் தனக்கு சோர்வளிப்பதாக கூறியுள்ளார். இனி FIDE நடத்தும் எதிலும் கலந்துகொள்ள விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். பிளிட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பிலும் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
FIDE விதிமுறையில் ஆடைக் குறியீட்டின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில். “ஒரு பாளீஷ்டு தோற்றம் விளையாட்டின் தீவிரத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறது. கவனம் செலுத்தும் மற்றும் ஈர்க்கக்கூடிய போட்டி அனுபவத்திற்கான தொனியை ஆடை அமைக்கிறது. இது ஒட்டுமொத்த சூழலையும் உயர்த்த உதவுகிறது, ஒரு கண்ணியமான மற்றும் மறக்கமுடியாத நிகழ்வை உருவாக்குகிறது.
“ட்ரெஸ் கோடு, பங்கேற்பாளர்களிடையே தோழமை மற்றும் பரஸ்பர மரியாதை உணர்வை ஊக்குவிக்கிறது, மேலும் ஒரு ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குகிறது, அங்கு அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள் மற்றும் சதுரங்க சமூகத்தின் ஒரு பகுதியாக உணர்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.