magnificient superstar rajinikanth praises 83 movie and crew

Share

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதை மையமாக வைத்து வெளியாகியுள்ள 83 என்ற படத்தை பார்த்து விட்டு, பிரமாண்டம், அற்புதம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். 

இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சிக்கான இணையதளம்: ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிமுகம்

அண்ணாத்த படத்திற்கு பின்னர் அடுத்த படம் குறித்து ஏதும் அறிவிக்காத ரஜினிகாந்த், தற்போது மற்ற படங்களை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். அத்துடன், விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள ராக்கி படத்தையும் பார்த்து விட்டு ரஜினிகாந்த் பாராட்டினார்.

இதையும் படிங்க : தலைநிமிர்ந்த தமிழ் சினிமா.. இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்!

ரஜினிக்கும் அண்ணாத்த படக்குழுவினருக்கும் இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. முன்பு, அண்ணாநகரில் உள்ள சிவா வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டிய ரஜினி, சமீபத்தில் படக்குழுவினரை வீட்டிற்கு வரவழைத்து தங்க செயின் வழங்கினார்.

இதையும் படிங்க : Pushpa vs Valimai: இந்தியில் புஷ்பா வசூலை வலிமை முறியடிக்குமா?

இந்த நிலையில், ரஜினியின் அடுத்த பாராட்டை 83 படம் பெற்றிருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கபில் தேவ் கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்க, ஏக்தா டைகர், டியூப் லைட், பஜ்ரங்கி பாய்ஜான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த கபீர் கான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கொரோனா பிரச்னை காரணமாக சுமார் ஓராண்டுக்கு பின்னர் இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், ‘வாவ்… என்ன மாதிரியான படம்! அற்புதம், பிரமாண்டம். படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர் கபீர்கான், கபில்தேவ், ரன்வீர் கபூர், தீபிகா படுகோனே, ஜீவா மற்றும் படக்குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்’ என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, திரையிடப்பட்ட பல்வேறு மாநிலங்களில் 83 படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 1980 கால கட்டத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும், அந்தந்த கேரக்டரில் வாழ்ந்துள்ளனர் என்று படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com