தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு மருத்துவப் அறுவை சிகிச்சை பிரிவை – சர்வதேச பேட்மிண்டன் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான ஜெர்லின் அனிகா, மற்றும் அப்போலோ மருத்துவமனை, மதுரை கிளஸ்டர் சிஓஓ திரு நீலக்கண்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கியுள்ளனர்.
டாக்டர் ஜான் பென்னி – ஆர்த்ரோஸ்கோபி, விளையாட்டு மருத்துவம் மற்றும் குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில் : விளையாட்டின் மூலம் ஏற்படும் மூட்டு சார்ந்த விபத்துகள் சரி செய்வதே இந்த முயற்சியின் தனி சிறப்பாக அமைகிறது. இந்த புதிய தொடக்கத்தின் மூலம் விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் பொது மக்களுக்கும் தனி சிகிச்சை முறைகளும் சிறப்பு அம்சங்களுடன் வழங்கப்படும் என்பதை அப்போலோ மருத்துவமனை உறுதிப்படுத்திகிறது.

தனி மனிதனின் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு மட்டும் அல்லாமல் அவர்கள் தங்களுடைய தினசரி வேலை செய்வதற்கும், விளையாட்டு மற்றும் உடல் பயிற்சி செய்வதற்கும் வழி வகுக்கிறது. அதி நவீன சிகிச்சை முறைகள் மூலம் நீண்ட நாள் நோய்களான டெண்டினோபதி மற்றும் மையோஃபேசியல் குறைபாடு போன்றவற்றையின் சிகிச்சையாக அமைகிறது.
இத்தகைய சிகிச்சையை அளிக்கின்ற நம் மருத்துவர்கள், விளையாட்டு மருத்துவ நிபுணராக இருப்பவர்கள் என்றும் அதற்க்கான பயிற்சியையும் பெற்றவர்கள் ஆவர்.
இந்த சிகிச்சைக்கு வருபவர்கள், முதலில் பதிவு செய்யப்பட்டு இதற்கான தனி தொகுப்பாக அமைக்கப்படுவார்கள். பதிவு செய்யப்பட்டவர்கள், முதலில் ஆர்த்ரோஸ்கொப்பி மற்றும் நோயின் தன்மையை கண்டறிந்து, அதற்காக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சிகிச்சை முறையில் வழி நடத்தப்படுவார்கள்.
இவருடன் விளையாட்டு பிசியோதெரபிஸ்ட்டும் உடன் இருப்பர், அவர் விளையாட்டு வீரரின் அனைத்து முயற்சிகளிலும், களத்திலும் இருந்து, பயிற்சி அளிப்பார். அவருடன் ஊட்டச்சத்து நிபுணரும் ஆலோசனையையும், விளையாட்டு வீரரின் தசை மற்றும் எலும்பு வலிமைக்காகவும், உளவியல் நிபுணர் அவர்களின் அறிவுரையால் மன வலிமை மற்றும் தன்னம்பிக்கை மேன்பட்டு, ஆடுகளத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

மேலும், டாக்டர் ராஜபாண்டியன் கே, மூட்டு மாற்று மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் அழகப்பன், எலும்பியல் நிபுணர் மற்றும் தொடக்க விழாவில் கௌரவ விருந்தினராக திரு ராஜா, மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர், முனைவர் த.வினோத், மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், டாக்டர் மேஜர். ஆர்.விஜய் ஆனந்த் – தொழில்சார் சுகாதார மையம், ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட், மார்க்கெட்டிங் மண்டல மேலாளர் திரு மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.