மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 வார்டு ஒதுக்கீடு
மதுரை மாநகராட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுக சிபிஎம் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. வார்டு எண்கள் 23, 58, 63, 80, 83, 86, 88, 94 ஆகிய எட்டு வார்டுகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 9 வார்டுகள் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது 8 வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.