Lionel Messi: இந்தியா வந்த மெஸ்ஸி; உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள் |Messi arrives in India; fans give him an enthusiastic welcome.

Share

“GOAT India Tour 2025′ என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்திருக்கிறார்.

விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.

 லயோனல் மெஸ்ஸி

லயோனல் மெஸ்ஸி

கடைசியாக 2011-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக விளையாட மெஸ்ஸி கொல்கத்தா வந்திருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அவர் இந்தியா வருகிறார்.

இதுகுறித்து டூர் அமைப்பாளர் சதத்ரு தத்தா கூறுகையில், “14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய கால்பந்துக்கும் உலக அரங்கிற்கும் உள்ள தொடர்பு மீண்டும் வளர்கிறது” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com