ஆரம்பத்தில் வழக்கமான சாலையோர உணவகமாக இருந்த இடம் ஒரு இளைஞரின் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவால் தற்பொழுது கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு மாறிவிட்டது. வழக்கமாக ஒரு சாலையோர உணவகம் என்று எடுத்துக் கொண்டால் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று உணவு வகைகள் இருக்கும். ஆனால் ஒரு சாலையோர கடையில் இவ்வளவு உணவு வகைகள் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இவருடைய கடையில் வகைவகையான உணவுகள் உண்டு.

120 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் நான்- வெஜ் மீல்ஸ். சிக்கன், மட்டன், மீன், என அனைத்து வகையான அசைவ உணவுகளைக் கொண்டு கலக்குவது மட்டுமில்லாமல், 7 வகையான சைவ கலவை சாதம், வெஜ் மீல்ஸ் என சைவ உணவு பிரியர்களுக்கும் இவருடைய கடையில் உணவுகள் உள்ளன. மதியம் 12:30 மணி முதல் 3 மணி வரை இவருடைய கடை செயல்படுகிறது.
‘தி எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையில் இக்கடையைப் பற்றிய கட்டுரை ஒன்றில், இவருடைய ஒரு நாள் வருமானம் கிட்டதட்ட 30,000 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம் இவருடைய கடையில், விலை சற்று அதிகமாக உள்ளது என்று சிலர் கூறி வந்தாலும், ‘டேஸ்ட்’ தரமாக உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். இவருடைய கடைக்கு வரும் ஐ.டி. ஊழியர்களால் தான் சாய் குமாரியின் பெயர் ‘குமாரி ஆன்டி’ என்று மாறி, அவருடைய கடைக்கும் அதே பெயர் வந்துவிட்டது.