Kohli: “RCB-யில் ஆரம்ப நாள்களில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த வீரர்” – நினைவுகள் பகிரும் கோலி | rcb star virat kohli spoke about mark boucher

Share

அந்த டிரெய்லரில் தன்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் குறித்து பேசிய விராட் கோலி, “ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்ய வேண்டும்.

விராட் கோலி

விராட் கோலி

அவர் என்னிடம் ஒருமுறை, “3 – 4 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, ​​நீங்கள் (கோலி) இந்தியாவுக்காக விளையாடுவதை நான் பார்க்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு விளைவிப்பீர்கள்” என்று சொன்னார். என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை அவர் மிகவும் திகைக்க வைத்தார்.” என்று கூறினார்.

உலக கிரிக்கெட்டின் லெஜண்ட் விக்கெட் கீப்பரான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மார்க் பவுச்சர், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 467 போட்டிகளில் 952 கேட்சுகளும், 46 ஸ்டம்பிங்க்ஸும் செய்திருக்கிறார். பேட்டிங்கில் 10,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் அடித்திருக்கிறார். ஆர்.சி.பி அணிக்காக 27 போட்டிகளில் 388 ரன்கள் அடித்திருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com