அவர் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தால், 100 சதவிகிதம் தனது அர்ப்பணிப்பைக் கொடுக்க நினைக்கிறார். அதை அத்தனை எளிதாக மீண்டும் நாம் செய்துவிட முடியாது.
நிறைய சாதனைகளைப் படைத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவிலான ரசிகர் கூட்டம் விராட் கோலிக்கு இருக்கிறது.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மக்கள் நேரில் வருகிறார்கள். அந்தளவிற்கு ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.