பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியால், அடுத்த டெஸ்ட் போட்டியில் யார் உட்கார வைக்கப்படப்போகிறார் என்பது அணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்குள் சுருண்டதற்கு முக்கிய காரணமாக அமைந்த ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி, சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்களில் ராகுலைத் தவிர மற்ற அனைவரும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 400 ரன்களைக் கடக்க முக்கிய பங்காற்றினர்.
KL Rahul: `ஒரு டெஸ்ட் மேட்ச்சால் கே.எல். ராகுலை உட்கார வைக்க முடியாது’ – ஆதரிக்கும் முன்னாள் வீரர் | You Can not Bench KL Rahul, former indian spinner Venkatpathy Raju supports him
Share