khushi mukherjee: "சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும்..!"- சர்ச்சைக்கு விளக்கம் அளித்த குஷி முகர்ஜி

Share

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று சொன்ன விஷயம் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அதாவது சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த குஷி முகர்ஜி, “நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

எனக்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் மெசேஜ் அனுப்புவார்கள். அவர் பெயர் கூட, சூர்யகுமார் யாதவ்.

அவர் எனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார். இப்போது நாங்கள் அதிகம் பேசுவதில்லை, நான் தொடர்பு கொள்ளவும் விரும்பவில்லை.

யாருடனும் என்னுடைய பெயர் இணைத்து பேசப்படுவதில் எனக்கு விருப்பமில்லை” என்று கூறியிருந்தார்.

சூர்யகுமார் யாதவ் குறித்து அவதூறாக கருத்து தெரிவிக்கிறார் என்று குஷி முகர்ஜிக்கு எதிராக எல்லோரும் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் குஷி முகர்ஜி இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். “சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும் இடையே எந்தவிதமான உறவும் இல்லை.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

என் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் தொடர்பில் இல்லை. சர்ச்சைக்குப் பிறகு நான் அவரிடம் பேசவும் இல்லை. என் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தது” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com