Kanimaa பாடல் 15 நிமிட சிங்கிள் ஷாட் உருவானது எப்படி? – நடன இயக்குநர் ஷெரிஃப் பேட்டி |Retro | Karthik Subbaraj

Share

‘கனிமா’ பாடல்தான் தற்போது ஒட்டு மொத்த மாவட்டங்களிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறது.

‘ரெட்ரோ’ படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் சென்சேஷனல் ஹிட் அடித்திருந்தது.

தற்போது படம் வெளியானதும் அதன் காட்சிகள் பார்வையாளர்களுக்கு இன்னும் பேவரைட்டாகியிருக்கிறது.

‘கனிமா’ பாடல், ஃபைட் சீன், உரையாடல் காட்சி என அத்தனையையும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியாக எடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

‘ரெட்ரோ’ படத்தின் நடன இயக்குநர் ஷெரீஃபிடம் இந்தப் பாடல் தொடர்பாக பல விஷயங்களைப் பேசினேன்.

பேச தொடங்கிய அவர், “ரொம்பவே சந்தோஷம். முக்கியமா, படத்துல வர்ற அந்த 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியைப் பற்றி சினிமாவுல இருந்து பலரும் எனக்குக் கால் பண்ணி வாழ்த்துறாங்க.

கார்த்திக் சுப்புராஜ் கதையை வச்சு பாடல், உரையாடல், ஸ்டன்ட்னு பல விஷயங்களை இந்த சிங்கிள் ஷாட்ல சேர்ந்திருந்தாரு.” எனக் கூறியவரிடம் அடுத்தடுத்துக் கேள்விகளை முன் வைத்தோம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com