இதில் மேலும் மோசமான விஷயம், இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில் அவர் காலவரையற்ற ஓய்வுக்குச் செல்கிறார், எப்போது வருவார் என்பது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே தேதி எதையும் குறிப்பிடவில்லை, கால அளவையும் குறிப்பிடவில்லை. காலவரையற்ற சிகிச்சை, மறு வாழ்வு மற்றும் ஓய்வுக்குச் செல்கிறார் ஜோப்ரா ஆர்ச்சர். அதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டையே துறக்க வாய்ப்பிருக்கிறது.
குறைந்தது அவர் டெஸ்ட் போட்டிகளை துறந்து பணமழை லீக் போட்டிகளை தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது, கிரிக்கேட் உலகம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரை இழக்கிறது என்றே தோன்றுகிறது என்கின்றனர் இங்கிலாந்து கிரிக்கெட் வல்லுநர்கள்.
மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் திரும்புவதற்கு ECB குறிப்பிட்ட காலக்கெடு எதையும் அமைக்காததால், அவர் காலவரையின்றி போட்டி கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்றே பொருள்.
ஜூலை மாதத்தில் ஆறு ஒயிட்-பால் ஆட்டங்களுடன் ஒரு டெஸ்ட் போட்டியை இந்தியா ஆடவுள்ளது. 27 வயதான ஜோஃப்ரா, கடைசியாக மார்ச் 2021 இல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார், முழங்கை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், பின்னர் ஸ்ட்ரெஸ் பிராக்சர் ஏற்படுவதற்கு முன்பு சசெக்ஸிற்கான கவுண்டி கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.
பார்படாஸில் பிறந்த ஜோஃப்ரா இதுவரை இங்கிலாந்துக்காக மூன்று வடிவங்களில் 42 சர்வதேச போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
காயத்தினால் வெறுப்படைந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு அறிவித்தாலோ அல்லது அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு அறிவித்தால் அது இங்கிலாந்துக்கு மட்டும் நஷ்டமல்ல கிரிக்கெட் உலகிற்கே நஷ்டம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.