JD Vance: அமெரிக்காவின் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்; யார் இந்த Usha Chilukuri? | Who is Usha Chilukuri Vance wife of US vice president candidate JD Vance

Share

அமெரிக்காவில் நடைபெற்ற 47-வது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட முன்னாள் அதிபர் ட்ரம்ப் வெற்றிபெற்றிருக்கிறார். அதே கட்சியில் துணை அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட ஜே.டி.வான்ஸும் வெற்றிபெற்றிருக்கிறார்.

விரைவில் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்கவிருக்கும் ஜே.டி.வான்ஸ், இந்திய வம்சாவளி உஷா சிலுக்குரி வான்ஸின் கணவராவார். இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய ஜே.டி.வான்ஸ், “இதைச் சாத்தியமாக்கிய என் அழகான மனைவிக்கு நன்றி. மேலும், நம் நாட்டிற்குச் சேவை செய்ய எனக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கியதற்கு அதிபர் டிரம்ப்புக்கும் நன்றி. அமெரிக்க மக்களுக்காகவும், அவர்களின் நம்பிக்கைக்காகவும் போராடுவதை நான் நிறுத்த மாட்டேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com