Jasprit Bumrah; Greg Chappell; பும்ரா விளையாடுகிறாரா இல்லையா என்பது முக்கியமான விஷயமல்ல என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிரெக் சேப்பல் தெரிவித்திருக்கிறார்.

Share

தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்தின் வலைத்தளப் பக்கத்தில் அடுத்த டெஸ்ட் போட்டி குறித்துக் கட்டுரை எழுதியிருக்கும் கிரெக் சேப்பல், “பும்ரா விளையாடுகிறாரா இல்லையா என்பது முக்கியமான விஷயமல்ல.

இந்திய அணி சமீபத்தில் அவர் இல்லாமலேயே நிறையப் போட்டிகளில் வென்றிருக்கிறது.

எனவே, இங்கு முக்கியமானது தனியொருவரின் ஆட்டம் அல்ல, ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிதான்.

எல்லா வீரர்களும் தங்களின் வேலையைச் செய்யும்போது அணி வெற்றிபெறுகிறது.

Greg Chappell - கிரெக் சேப்பல்

Greg Chappell – கிரெக் சேப்பல்

ஒவ்வொரு வீரரையும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும், கேம் பிளானுக்குத் தயாராகவும் இருப்பதை கேப்டன் உறுதிசெய்வதுதான் அதற்கான ஃபார்முலா.

இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. இப்போது 25 வயது கேப்டன் சுப்மன் கில் மீது கவனம் திரும்பியிருக்கிறது.

பேட்டிங் மற்றும் தலைமைப் பண்புகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனால், இந்தத் தருணம்தான் ஒரு டெஸ்ட் கேப்டனாக அவரது பாதையை வரையறுக்கும்.

இருப்பினும் அது எளிதல்ல. இந்தியா எந்த மாதிரியான அணியாக இருக்க வேண்டும் என்று கில் வரையறுக்க வேண்டும்.

ஒரு கேப்டன் வெறும் சொற்களால் அல்லாமல், தனது செயல்கள் மற்றும் தெளிவான நோக்கத்தால் அணியைக் கட்டமைக்கிறார்.” என்று எழுதியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com