Jasprit Bumrah; bcci; eng vs ind; இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு கேப்டன்சி வேண்ட என்று தாமாக பிசிசிஐ-யிடம் கூறியதாக பும்ரா தெரிவித்திருக்கிறார்.

Share

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) முதல் இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோஹித் சர்மா விளையாடாத இரண்டு போட்டிகளில் பும்ரா கேப்டனாகச் செயல்பட்டார்.

பின்னர், ரோஹித் ஐ.பி.எல் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்திலேயே திடீரென சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கவே, இந்திய டெஸ்ட் அணிக்கு பும்ராதான் அடுத்த கேப்டனாக வருவார் என்று பேச்சு அடிபட்டது.

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா
https://x.com/BCCI

ஆனால், ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தின்போது, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியை அறிவித்த பி.சி.சி.ஐ, டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில்லையும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டையும் நியமித்தது.

அதோடு, உடற்தகுதி காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில்தான் பும்ரா விளையாடுவார் என்றும் தெரிவித்தது.

மறுபக்கம், பும்ராவை ஏன் கேப்டனாக நியமிக்கவில்லை என்று பலரும் கேள்வியெழுப்பிய வண்ணம் இருந்தனர். இந்த நிலையில், அத்தகைய கேள்விகளுக்கு பும்ராவே தற்போது பதிலளித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com