Jana Nayagan: “கடைசி நாள் போட்டோ எடுக்கும்போது விஜய் சார் எமோஷனல் ஆகிவிட்டார்!” – மமிதா பைஜூ |Jana Nayagan Movie | H Vinoth | HBD Vijay

Share

விஜய் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மமிதா பைஜு, “விஜய் சார் ரொம்பவே பண்பாக இருப்பார். படப்பிடிப்புத் தளத்திற்கு அவருக்குச் சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர் வந்துவிடுவார். விஜய் சார் சூப்பர் கூல்! எப்போதுமே அவர் அமைதியாகத்தான் இருப்பார்” எனக் கூறியிருந்தார்.

தற்போது சமீபத்திய நிகழ்வு ஒன்றிலும் விஜய் பற்றிப் பேசியிருக்கிறார். அந்தக் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்வில் அவர், “நான் விஜய் சாரிடம், ‘இதுதான் உங்களுக்குக் கடைசி திரைப்படமா? அப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’ எனக் கேட்டேன்.

Mamitha Baiju About Vijay

Mamitha Baiju About Vijay

அதற்கு அவர், ‘தெரியவில்லை. தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அது தெரியும்’ என்றார். கடைசிக் கட்டப் படப்பிடிப்புகளில் நாங்கள் அனைவரும் எமோஷனலாகிவிட்டோம்.

விஜய் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும், அவருடன் புகைப்படம் எடுக்கும்போது நானும், சுற்றி இருந்த அனைவரும் எமோஷனலாகிவிட்டோம். அப்போது விஜய் சாரும் எமோஷனலாகிவிட்டார்” எனக் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com