“ஹிஸ்புல்லா தலைவர் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு இஸ்ரேல் அவர் மீது தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது’ என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் கிட்டதட்ட 32 ஆண்டுகால தலைவர் ஹஸன் நஸ்ரல்லா தாக்குதலில் உயிரிழந்ததை கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக இஸ்ரேலை தாக்குவதில் களமிறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் மீது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். அவ்வாறான ஒரு தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா உயிரிழந்தார்.


லெபனானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் பௌ ஹபிப் இன்று அளித்துள்ள பேட்டியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில், “நஸ்ரல்லா உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னாள் அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்த ஒப்புக்கொண்டார். அதன் பின்னர், லெபனான் அரசின் இந்த முடிவை அமெரிக்கா மற்றும் பிரென்ச் அரசுகளிடம் தெரிவித்தோம். இந்த இரு நாட்டு அரசுகளும் எங்களிடன் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்டதாக கூறியது” என்று பேசியுள்ளார்.