கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அத்தனை ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்களையும் மும்பையிலுள்ள பி.சி.சி.ஐ.,யின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்திருந்தனர். ஷாருக்கான் உட்பட அத்தனை உரிமையாளர்களும் இந்த மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தனர். இதில்தான் மெகா ஏலம் உட்பட எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் என்பது போன்றவையெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்துக் கொண்டே இப்போது பி.சி.சி.ஐ., முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகத் தெரிகிறது.
2008ஆம் ஆண்டு ஐ.பி.எல்., முதல் சீசன் நடந்திருந்தது. 2011 சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடந்திருந்தது. அப்போது மொத்தமாக 4 வீரர்களையும் அதில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் பி.சி.சி.ஐ., தெரிவித்திருந்தது. 2014 சீசனுக்கு முன்பாக 5 வீரர்களையும் அதில் அதிகபட்சமாக 4 இந்திய வீரர்களையும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றது பி.சி.சி.ஐ.,. இதற்கடுத்த மெகா ஏலத்திற்கு முன்புதான் RTM – Right to Match கார்டுகளை பி.சி.சி.ஐ., அறிமுகப்படுத்தியது.