IPL Player Retentions: 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு? | 10 IPL teams purse remaining post player retentions before mega auction

Share

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்திருந்த கெடு தேதி அன்று 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்கவைத்துள்ளது. அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் விளையாடுகிறார். இப்படியாக பல்வேறு முன்கணிப்புகளை 10 அணிகளும் தகர்த்து தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்க வைத்துள்ளன. இந்த சூழலில் மெகா ஏலத்துக்கு முன்னதாக 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு என்பதை பார்ப்போம்.

ஒவ்வொரு அணியும் ரூ.120 கோடி வரை வீரர்களை வாங்கலாம். தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கான தொகை இதிலிருந்து கழிக்கப்படும். உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, பதிரனா, ஷிவம் துபே மற்றும் தோனி ஆகியோரை மொத்தமாக ரூ.65 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அந்த தொகை போக மீதமுள்ள ரூ.55 கோடியை கொண்டு மெகா ஏலத்தில் வீரர்கள் வாங்க வேண்டும்.

10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு?

  • மும்பை இந்தியன்ஸ் – ரூ.45 கோடி
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ.45 கோடி
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.55 கோடி
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ.83 கோடி
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ.69 கோடி
  • பஞ்சாப் கிங்ஸ் – ரூ.110.5 கோடி
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ.41 கோடி
  • டெல்லி கேபிடல்ஸ் – ரூ.73 கோடி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.51 கோடி

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com