IPL Mega Auction Live: நாளை நடைபெறுகிறது ஐ.பி.எல் மெகா ஏலம்..! – எப்போது, எங்கு, எதில் பார்க்கலாம்?! | IPL Mega Auction 2024 Live updates

Share

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டாவில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏல பட்டியலில் உள்ளனர்.

அதில் 1165 பேர் இந்தியர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த ஆண்டு ஏலத்தில் கூடுதல் சிறப்பாக பல இந்திய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், இஷான் கிஷன் என்று இந்திய அணிக்காக ஆடி வரும் பிராண்ட் வேல்யூ கொண்ட வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது. மெகா ஏலத்தில் எந்த வீரர் எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், ஜியோ சினிமா ஓ.டி.டி தளங்கள் முதலியவற்றில் ஐ.பி.எலின் இந்த மெகா ஏலத்தை நேரலையில் பார்க்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com