IPL Auction 2025: "மஞ்சள் நிற ஜெர்சியையே அணிய விருப்பம்; இல்லையெனில்…" – தீபக் சஹார் ஓப்பன் டாக்!

Share

2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

அடுத்தடுத்த தொடர்களுக்கான வீரர்களின் ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அந்த வகையில் ஐ.பி.எல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, ஷிவம் துபே, தோனி ஆகிய 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது.

தீபக் சஹார்

இந்த தக்கவைப்பு பட்டியலில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹாரின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த முறை சென்னை அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த அவர், கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனில் சிஎஸ்கே அணி தன்னைத் தக்கவைக்காவிட்டாலும், மெகா ஏலத்தில் தன்னை நிச்சயம் வாங்குவார்கள் என தீபக் சஹார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “சென்னை அணி என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன். கடைசியாக நடந்த மெகா ஏலத்திற்கு முன்பாகவும் சிஎஸ்கே அணி என்னைத் தக்கவைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளைச் செய்து என்னை ஏலத்தில் எடுத்தார்கள். இம்முறை என்ன நடக்கப் போகிறது எனத் தெரியவில்லை.

தீபக் சஹார்

ஆனால் பவர்பிளேயில் சுமார் 90-100 ரன்கள் எடுக்கப்படுவதாலும், ஒவ்வொரு அணியும் அடிக்கடி 200 ரன்களுக்கு மேல் அடித்ததால் எனது திறமைக்கு இப்போது மதிப்பு அதிகம் என்று எனக்குத் தெரியும். நான் மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியை அணிய விரும்புகிறேன், இல்லையென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்காக ஏலம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com