IPL 2026: "யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" – சுப்மன் கில்

Share

‘யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச்.27) கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி மார்ச் 31 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி
குஜராத் டைட்டன்ஸ் அணி

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கேப்டன் சுப்மன் கில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.

ஐபிஎல் குறித்து பேசிய அவர், “ஐபிஎல்-இல் கடந்த நான்கு சீசன்களை எடுத்துக்கொண்டால் நான்தான் அதிக ரன்களைக் குவித்திருக்கிறேன். அதனால் யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

நான் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். அணியாகவும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

இதுபோன்று நாங்கள் செயல்பட்டால் நிச்சயம் மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

தொடர்ந்து டி 20 உலகக்கோப்பையில் இடம்பெறாதது குறித்து கேள்விக்கு, “டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com