IPL 2026: “ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் தான் சிறந்த அணி.!”- இர்பான் பதான்|“Irfan Pathan says, ‘Mumbai Indians is the best team in the IPL!’”

Share

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக் கொடுத்து ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், சிறந்த அணி எது? என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

JioStar நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இர்பான் பதான், “ஐபிஎல் தொடர் என்பது ஒருநாள் உங்களை ஹீரோவாக்கும், மறுநாளே உங்களை காணாமல் போகச் செய்துவிடும்.

ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து வாங்கப்படும் வீரர்கள், அடுத்த சீசனில் மோசமாக விளையாடி, பின்னர் எந்த அணியாலும் கண்டுகொள்ளப்படாமல் போவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.

ஒரு வீரர் மீது இவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சில போட்டிகளில் சொதப்பினால் என்ன நடக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அந்தச் சரிவிலிருந்து அவர் தன்னை எப்படி மீண்டும் தயார்படுத்திக் கொண்டு, நம்பிக்கையுடன் களத்திற்கு வருகிறார் என்பதே அவரது உண்மையான திறமையைக் காட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com