58 பந்துகளில் செஞ்சுரி… உலக அளவில் சாதனை!
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் சொந்த மாநிலத்துக்காக ரஞ்சி டிராபியிலும் களமிறங்கினார். இதன் மூலம், 12 வயதிலேயே ரஞ்சிப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனைப் படைத்தார். அதன்பிறகு அவர் தொட்டதெல்லாம் சாதனைதான். கடந்த ஆண்டு, 19 வயதிற்குட்பட்ட ஆஸ்திரேலிய ஆணிக்கெதிரான இளையோர் டெஸ்டில் இந்திய அணி சார்பில் களமிறங்கி அதிரடியாக 58 பந்துகளில் சதமடித்தார்.

இதன்மூலம், உலக அளவில் U19 இளையோர் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தையும், அதில் இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார். அனைவரின் பார்வையும் இவர் மேல் விழ, அதற்கு மேலும் ஒளி கூட்டும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இவரை ராஜஸ்தான் அணி ரூ. 1.10 கோடிக்கு வாங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் (13 வயது) ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை இவர் வசமானது.

இப்போது, ஐ.பி.எல்லில் மிகக் குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையுடன் லக்னோவுக்கெதிராகக் களமிறங்கி, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து நல்ல இன்னிங்ஸ் ஆடி கவனம் ஈர்த்திருக்கிறார்.
கூடிய விரைவில் இந்திய அணியிலும் இடம்பெற்று உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் வைபவ் சூர்யவன்ஷி!
ஐ.பி.எல்லில் இதற்கு முன் குறைந்த வயதில் அறிமுகமானவர்கள்:
பிரயாஸ் ரே பர்மன் (2019 – 16 வயது – பெங்களூர் அணி)
முஜீப் உர் ரஹ்மான் (2018 – 17 வயது – பஞ்சாப் அணி)
அபிஷேக் ஷர்மா(2018 – 17 வயது – டெல்லி அணி)
ரியான் பராக்(2019 – 17 வயது – ராஜஸ்தான் அணி)
சப்ராஸ்கான் (2015 – 17 வயது – பெங்களூரு அணி)