ஐ.பி.எல் தொடரின் நேற்றையைப் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.
இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய ரிஷப் பண்ட், “இந்த மைதானம் உண்மையிலேயே விளையாடுவதற்கு மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கணிக்கத் துவங்கினோம்.
அதற்கு ஏற்ற மாதிரி விளையாடியதால் எங்களால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. மிட்சல் மார்ஷ் போன்ற அதிரடியான துவக்கத்தை ஒரு வீரர் அளிக்கும் போது அது மிடில் ஆர்டரில் விளையாடுபவர்களுக்கு இன்னும் போட்டியை எளிதாக்குகிறது.
அந்த வகையிலேயே இந்த போட்டியில் நாங்கள் சூழலைக் கணித்துச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். அதேபோன்று மும்பை அணியும் இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பாக விளையாடியது.