
கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 204 ரன்களைச் சேர்த்துள்ளது.
16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கினர்.