நேற்றைய போட்டியில் முக்கியமான நேரத்தில் உள்ளே வந்து எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்துக் கொடுத்து சிஸ்கே அணிக்கு சிறப்பாக பங்காற்றியிருந்தார். இந்நிலையில் போட்டிக்கு பிறகு அம்பதி ராயுடு குறித்து பேசிய தோனி, “அம்பத்தி ராயுடு களத்தில் இருக்கும் போது தனது 100 சதவிகிதத்தைக் கொடுப்பார். ஆனால் அவர் அணியில் இருப்பதால் எங்களால் ஒருபொழுதும் பேர்-ப்ளே விருதை (Fair Play Award) வெல்ல முடியாது” என்று ராயுடுவை தோனி நகைச்சுவையாகக் கலாய்த்திருந்தார்.
தோனி அவ்வாறு கலாய்க்கக் காரணம் என்னவென்றால், ஐபிஎல் தொடரில் சண்டை சச்சரவுகள், விவாதங்கள், ஆக்ரோஷமான செயல்கள் மற்றும் சர்ச்சையான விஷயங்களில் வீரர்கள் ஈடுபடாமல் இருந்தால் அந்த அணிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஃபேர் பிளே விருது வழங்கப்படும்.