IPL 2023 Daily Round Up: தோனியை மிஞ்சிய ஹர்திக் பாண்டியா முதல் பியூஷ் சாவ்லாவின் சாதனை வரை!|IPL 2023 Daily Round Up 26-04-2023

Share

‘சம்பவக்காரன்’ ஹர்திக்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐந்தாவது வெற்றியாகும். அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வீரராக இருக்கிறார். இந்தத் திறமையால் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ஹர்திக். 21 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ள இவர்,15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் வின்னிங் ரேட் 75.00 சதவிகிதமாக உள்ளது. இவருக்கு அடுத்து சி.எஸ்.கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, 58.99 சதவிகிதமாக வின்னிங் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

ஆப்கானிஸ்தானின் ரெட்டைக் கதிர்கள்:

குஜராத் டைட்டன்ஸ் அணியின் நேற்றைய வெற்றிக்கு, அணியின் பந்துவீச்சாளர்கள் ரஷித் கானும் நூர் அஹமதும் மிக முக்கியக் காரணம். ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களான இவர்கள் இருவரும் 5 விக்கெட்டுகளை எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் லைன் அப்பை ஒட்டுமொத்தமாக சிதைத்தனர். நூர் அஹமத், 4 ஓவர்கள் வீசியதன் மூலம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com