கம்பேக் கொடுத்த மார்க் வுட்!
நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 49 ரன்களை விட்டுக் கொடுத்தார். 5 வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்குத் திரும்பியுள்ள மார்க் வுட், தனது முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி “மாஸ் கம்பேக்” கொடுத்துள்ளார்.
ரிஷப் பண்ட்-ன் நெகிழ்ச்சியான ட்வீட்!
நேற்று, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்திற்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களிடம் ஆடும் லெவனில் இடம்பெறவுள்ள வீரர்களை கணிக்கும்படி பதிவிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த ரிஷப் பண்ட், “இம்பாக்ட் பிளேயர் விதியின்படி, நான் அணியில் 13 வது வீரர். இல்லையெனில், அணியில் 12 வது வீரராக இருந்திருப்பேன்” என பதிவிட்டுள்ளார். இம்பாக்ட் பிளேயர் விதியின்படி, 12 வது வீரராக “இம்பாக்ட் பிளேயர்” மட்டுமே களமிறங்க முடியும். கார் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் விளையாடவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.