IPL 2023 Daily Round Up: கோப்பையை CSK தவறவிட்ட தினம் முதல் சஹலின் சாதனை வரை!| IPL 2023 Round Up: From CSK’s day of missing the trophy to chahal’s feat!

Share

ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக, ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்துள்ளது, ஐபிஎல் நிர்வாகம். போட்டிக்கு பிறகு பேசிய ஜெய்ஸ்வால், “இன்று, என்னுடைய தவறான அழைப்பின் காரணமாக பட்லர் தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார். நான் அதை மிகவும் மதிக்கிறேன். இது விளையாட்டில் நடக்கும் என்று நமக்கு தெரியும். யாரும் அதை வேண்டுமென்றே செய்வதில்லை,” எனக் கூறினார்.

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

சர்ஃபிங் செய்த கான்வே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே, நேற்று முன்தினம் மகாபலிபுரத்திற்கு சென்றுள்ளார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான மகாபலிபுரத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த அவர், கடற்கரை கோவில் மற்றும் அங்கிருந்த கட்டடக்கலையை பார்வையிட்டார். மகாபலிபுரம் கடற்கரையில் சர்ஃபிங் செய்து விளையாடினார், கான்வே. இவர் சர்ஃபிங் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சஹலின் புதிய அத்தியாயம்!

நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹல், அசத்தலான 4 ஓவர்களை வீசினார். இதில் 25 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (187) வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் இருந்த ட்வைன் பிராவோ-வை கடந்த ஆட்டத்திலேயே சமன் செய்திருந்தார். சஹலுக்கு பிறகு, பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், பியூஷ் சாவ்லா 174 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com