அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. 179 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சுப்மன் கில் – சஹா இணை துவக்கம் கொடுத்தது. சஹா நான்கு ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்ததாலும் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல் சாய் சுதர்சனும் 22 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். இந்த இருவர் விக்கெட்டையும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்திருந்தார். இருவருமே கேட்ச் ஆகி வெளியேறினர்.