இந்திய அணி சமீபமாக முக்கியமான ஐ.சி.சி தொடர்களிலும் பன்னாட்டுத் தொடர்களிலும் கடுமையக்ச் சொதப்பி வருகிறது. இந்திய அணியின் சொதப்பல்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ‘பணிச்சுமை’ என்பதும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருப்பதால் அயர்ச்சியடைந்துவிடுகின்றனர். முன்னணி வீரர்கள் பலர், காயங்களில் சிக்கி முக்கியமான போட்டிகளில் பங்கேற்க முடியாமலும் போகிறது. கடந்த 2021 டி20 உலகக்கோப்பை, ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த ஒரு சில நாள்களில் நடைபெற்றிருந்தது. ஐ.பி.எல்-இல் அதே துபாயில் சிறப்பாக ஆடிய வீரர்கள் உலகக்கோப்பையில் கடுமையாகச் சொதப்பியது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வீரர்கள் மெஷின் போல தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருப்பதுதான் பிரச்னை என்று பேசப்பட்டது.
IPL 2023-ல் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு; பிசிசிஐயின் புதிய திட்டம் கைகொடுக்குமா? | BCCI’s new suggestion to IPL Franchises
Share