IPL 2023 | ராஜஸ்தான் வலுவான அணியாக உள்ளது: டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் | IPL 2023 Rajasthan royals has strong squad Delhi capitals coach Ricky Ponting

Share

டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் வலுவான அணியாக இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இன்று 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. அணிக்கு வலு சேர்க்கும் வகையில் ஜோ ரூட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரை இந்த சீசனுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான். இந்நிலையில், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும். ராஜஸ்தான் அணி வலுவாக இருப்பதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். தனது அணி நீங்கலாக மற்ற அணி குறித்து கருத்து சொல்லுமாறு கேட்டதற்கு அவர் இந்த பதிலை பகிர்ந்துள்ளார்.

“ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது அரிது. அதனால் யார் வெல்வார்கள் என சொல்வதும் கடினம். கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த முறை இறுதிப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி இந்த முறை வலுவான அணியை அதனை அடிப்படையாக வைத்தே கட்டமைத்துள்ளது. ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ராஜஸ்தான் வலுவாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள யாஷ் துல் மற்றும் அமன் கான் ஆகியோருக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும் என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com